இதுநாள் வரை கலாகேந்திரா (கோவிந்தராஜன் மற்றும் துரைசாமி), ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் (இராம அரங்கண்ணல்), பிரேமாலயா (வெங்கட்ராமன்) ஆகியோருக்கு அதிக அளவில் திரைப்படங்களை எழுதி இயக்கி வந்தார் கேபி..தவிர்த்து..நண்பர்களான, திரு ஆலங்குடி சோமு,(பத்தாம் பசலி). சித்ராலயாவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாய் இருந்த சர்மா (நான்கு சுவர்கள்), ஏ.கே.வேலன் (நீர்க்குமிழி) ஆகியோருக்கும் படங்களை இயக்கினார் பாலசந்தர்.
1981ஆம் ஆண்டு, பாலசந்தர், ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர் சேர்ந்து "கவிதாலயா" என்ற நிறுவனத்தைத் துவங்கினர்.பாலசந்தரின் படங்கள் "கவிதாலயா" தயாரிப்பில் வர ஆரம்பித்தன.
1982ல் அக்னி சாட்சி படம் வெளிவந்தது.இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் நடித்தனர்.சரிதாவிற்கு, "SCHIZOPHRENIA" (எண்ணம். செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் கோளாறு).அதனால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு.சரிதா இப்படத்தில் மிகவும் அருமையாய் நடித்திருந்தார்.இருந்தாலும், படம் சரியான அளவில் மக்களை சென்று அடையவில்லை எனலாம்.
இதே படம் , பல ஆண்டுகள் கழித்து திரைக்கு மீண்டும் வந்தபோது பெரும் வரவேற்பு இருந்தது. .இது இயக்குநரின் திறமை இல்லாமல் வேறென்ன. பத்து ஆண்டுகள் பிந்தைய நிகழ்வுகளை பத்து ஆண்டுகள் முன்னரே சொன்ன தீர்க்கதரிசி கேபி எனலாம்.
சரிதாவிற்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
No comments:
Post a Comment